இளையபெருமாள் வாழ்க்கை சரித்திரம் நூல் அறிமுகம் மற்றும் திறனாய்வு கூட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 14 March 2023

இளையபெருமாள் வாழ்க்கை சரித்திரம் நூல் அறிமுகம் மற்றும் திறனாய்வு கூட்டம்


இளையபெருமாள் வாழ்க்கை சரித்திரம் நூல் அறிமுகம் மற்றும் திறனாய்வு கூட்டம்


கடலூர் மாவட்டம், புவனகிரியில் எழுத்தாளர் பாலசிங்கம் ராஜேந்திரன் எழுதிய இளையபெருமாள் வாழ்க்கை சரித்திரம் நூல் அறிமுகம் மற்றும் திறனாய்வு கூட்டம் நடைபெற்றது. கன்னிகா பரமேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு ஆதி தமிழர் அறக்கட்டளை நிறுவனர் அழகப்பன் தலைமை தாங்கினார். மு.தலைவர் தொழிலாளர் விடுதலை முன்னணி பெல் சிவனான பிரகாசம் புத்த வந்தனம் கூறினார். அயோத்திதாசர் அம்பேத்கர் வாசகர் வட்டம் ஒருங்கிணைப்பாளர் பிரதீபன் சாக்யா வரவேற்றார். பேரா சத்யமூர்த்தி ஜெயம் செந்தில் ஆசிய ஜோதி ரகுவசந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளருமான சிந்தனை செல்வன் பங்கேற்று பாலசிங்கம் ராஜேந்திரன் எழுதிய இளையபெருமாள் வாழ்க்கை சரித்திரம் நூலை வெளியிட்டு பேருரை ஆற்றினார்.இந்த நூலை இந்திய மனித உரிமை கட்சி மாநில தலைவர் மகிழ்வாணன் பெற்றுக் கொண்டார். காமராசர் பல்கலைக்கழகம் மதுரை பாலசுப்பிரமணியன்,அருள் ஆனந்தர் கல்லூரி குருசாமி, அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆறு.அன்புஅரசன் ஆகியோர் நூல் திறனாய்வு உரை நிகழ்த்தினார்கள்.



வாழ்த்துரையில் காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில செயலாளர் TKM வினோபா, பேராசிரியர் பிரபுதாஸ், ஆசிரியர் கலியபெருமாள், சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிச்செயலாளர் வ.க செல்லப்பன்,விசிக கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் பால அறவாழி, புவனகிரி தொகுதிச்செயலாளர் சுதாகர், மாநில செயலாளர் நீதிவளவன், பேரூராட்சி மன்ற துணை தலைவர் முல்லைமாறன், கஸ்பா பாலா, காட்டுமன்னார்கோவில் தொகுதி செயலாளர் வெற்றிவேந்தன், விசிக மாநில துணை செயலாளர் வி.க.இ.பே செல்ல பாலு, சுத்துக்குளம் கலை மோகன், அண்ணாமலை பல்கலைக்கழகம் பழனிவேல் ராஜன், ரயில்வே துறை கருப்புசாமி, வி.க.இ.பே. மாநிலத் துணைச் செயலாளர் சேரிக்குயில் சேட்டு,அம்பேத்கார் சமூக அறக்கட்டளை பாலமுருகன்,வழக்கறிஞர் சண்முகம், விசிக குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் சமத்துவன்,பௌத்த ஆய்வாளர் பொய்யாமொழி முருகன்,கீரப்பாளையம் மோகனாம்பாள், உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.எழுத்தாளர் பாலசிங்கம் ராஜேந்திரன் ஏற்புரை நிகழ்த்தினார்.இந்த நிகழ்ச்சியினை எழில்வேந்தன், முத்தமிழ் வேந்தன்,பாரி பிரித்திவிராஜ்,சக்திவேல் ஆகியோர் கொண்ட குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். மாவட்ட சிறுபான்மை நல குழு உறுப்பினர் மேக. பிரவீன் நெறியாளுகை செய்தார் முடிவில் எழுத்தாளர் அருள் முத்துக்குமரன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

*/