சேத்தியாத்தோப்பு சர்க்கரை ஆலையில் எத்தனால் தயாரிக்க பொதுமக்களிடம் கருத்து கேட்புக் கூட்டம்.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் எம் ஆர் கே சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் எத்தனால் தயாரிப்பது பற்றி சில ஆண்டுகளாகவே முயற்சி நடந்து கொண்டிருந்தது. இந்த எத்தனால் தயாரிப்புப் பற்றி பொதுமக்களிடம் கருத்து கேட்கும் நிகழ்ச்சி இன்று சேத்தியாத்தோப்பு கே பி டி மஹாலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகன், எம் ஆர் கே.சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குனர் சதீஷ், மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டுப் பொறியாளர் உதயகுஞ்சரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆலையின் தலைவர் கானூர் பாலசுந்தரம், ஆலை அதிகாரிகளான கணக்கு அலுவலர்ரமேஷ் பாபு, தலைமைக் கரும்பு அலுவலர் ரவிகிருஷ்ணன், அலுவலக மேலாளர் வெங்கடாஜலபதி, தொழிலாளர் நல அலுவலர் சக்கரபாணி, தலைமைப் பொறியாளர் ரவிக்குமார், கரும்பு ரசாயன அலுவலர் செல்வேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சேத்தியாத்தோப்பு பேரூராட்சி மன்றத்தலைவர் தங்க குலோத்துங்கன், புவனை ஒன்றிய திமுக செயலாளர்ஏஎஸ்.மதியழகன், திமுக நகரச் செயலாளர் வக்கீல்பழனி மனோகரன், அதிமுக பேரூராட்சி கவுன்சிலர் கே பி ஜி கார்த்திகேயன், பாமக மாநில நிர்வாகி சிட்டிபாபு, பாமக புவனை ஒன்றியச்செயலாளர் சரண்ராஜ்,பாமக சேத்தியாத்தோப்புநகரச் செயலாளர் கலைமணி, விசிக கட்சியின் நிர்வாகி தமிழ்மணி, பழனிவேல், கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதிமூலம், மற்றும் ஆம் ஆத்மி கட்சி பிரமுகர்கள், ஏராளமான கரும்பு பயிரிடும் விவசாயிகள், சுற்று வட்டார கிராம பொதுமக்கள் எனப் பெருந்திரளானவர்கள்கலந்து கொண்டனர்.
எத்தனால் தயாரித்தால் சர்க்கரை தயாரிப்பில் ஏற்படும் நட்டத்தை இதில் ஈடு செய்யலாம் என்பது உண்மை என்றாலும் அதன் பாதிப்புகளை அறிந்து மிகவும் பாதுகாப்புடன் செயல்படுத்த வேண்டும் என்றும், இந்த எத்தனால் தயாரிப்புக்கு உள்ளூரிலிருந்து அதிகப்படியான ஆட்களை வேலைக்கு எடுக்க வேண்டும் என்றும், மூன்று அல்லதுஆறு மாதத்திற்கு ஒருமுறை இதில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும்,இதன் கழிவுகளை மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாவண்ணம் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சேத்தியாத்தோப்பு கடைத்தெருவில் இருந்து சர்க்கரை ஆலை செல்லும் வரைஉள்ள சாலையை செப்பனிட வேண்டும் என்றும் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் தெரிவித்தனர். பொதுமக்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டு இந்த எத்தனால் தயாரிப்பு மிகவும் பாதுகாப்பாக செயல்படுத்தப்படும் என்று சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குனர் சதீஷ் தெரிவித்தார்.
No comments:
Post a Comment