மாசி மகத்தை முன்னிட்டு இன்று கடலூர் வெள்ளி கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
இதனை முன்னிட்டு கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ,மாவட்ட செயலாளர் எம் சி சம்பத் தலைமையில் கடலூர் மாநகரம் 17 வது வார்டு அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
நிகழ்ச்சியில் மருத்துவர் சீனிவாச ராஜா மாவட்ட அவை தலைவர் சேவல் ஜி ஜே குமார் மாநகராட்சி பகுதி செயலாளர்கள் முதுநகர் வ. கந்தன் மஞ்சக்குப்பம் கே.வெங்கட்ராமன் புதுப்பாளையம் வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் , ஒன்றிய கவுன்சிலர் வேல்முருகன் கடலூர் மாமன்ற உறுப்பினர்கள் ஏ.ஜி தஷ்னா,அலமேலு மணிமாறன் தமிழ்ச்செல்வன் வார்டு செயலாளர்கள் ஜி ராஜேந்திரன், குமார், சங்கர் , அருண் மற்றும் அதிமுக வினர் திரளாக கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் 3000 திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
No comments:
Post a Comment