கடலூர், மாவட்டம் வடலூரில் போதையில்லா தமிழ்நாடு ஒரு கோடி கையெழுத்து இயக்கம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் வடலூர் வள்ளலார் பேருந்து நிலையம் அருகில் நேற்று நடைபெற்றது.வாலிபர் சங்க ஒன்றிய துணைத் தலைவர் அசோக் தலைமை தாங்கினார். வாலிபர் சங்க ஒன்றியசெயலாளர்பூவைபாபு முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக வடலூர் மருத்துவர் சரவணன், முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து வாலிபர் சங்க மாவட்ட தலைவர்சின்னத்தம்பி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் தண்டபாணி, மாவட்டகுழுஉறுப்பினர்சிவகாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடலூர் நகர அமைப்பு செயலாளர் இளங்கோவன், கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய குழு உறுப்பினர் மணிவண்ணன், விசிக வடலூர் வடக்கு நகரச் செயலாளர் ஜோதிமணி பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கையெழுத்திட்டனர்.
அப்போது அவர்கள் போதையில்லா தமிழகத்தை உருவாக்கிடவும், அதில் இருந்து மாணவர்கள் இளைஞர்களை காத்திடவும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை கட்டுப்படுத்திட வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.
போதை பழக்கத்துக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தைசுதா மருத்துவமனை நிறுவனர் டாக்டர் சரவணன் முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.
No comments:
Post a Comment