கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள மேட்டுத்தெருவில், இந்தப் பகுதியில் மிகவும் புகழ்வாய்ந்த அருள்மிகு மஹாகாளியம்மன் ஆலயம் இந்த மகா காளியம்மன் ஆலயத்தில்த்தில் மகாகும்பாபிஷேக விழா செண்டை மேளங்கள் முழங்க கோலாகலமாக13/03/2023 திங்கள் கிழமை இன்றுகாலை நடைபெற்றது.
முன்னதாக 2 காலங்களாக நடைபெற்ற பூஜையில் புனித நீரை கலசத்தில் வைத்து. வேதமந்திரங்கள் முழங்க பலவிதசிறப்புப் பூஜைகள் நடைபெற்றுக் கலசம் கோவிலைச் சுற்றி ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க புனித நீர் கோபுரக்கலசத்தின் மேல் ஊற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து கலசத்தில் ஊற்றப்பட்ட புனிதநீர் பொதுமக்கள் மீது தெளிக்கப்பட்டது.
அப்பொழுது கூடியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மஹாகாளி அம்மனை மனதார வேண்டிக்கொண்டு தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது . இந்த கும்பாபிஷேக விழாவில் சேத்தியாத்தோப்பு, மேட்டுத்தெரு, ஆனைவாரி, நல்ல தண்ணீர் குளம், சின்னக் குப்பம், பெரியக்குப்பம், வீரமுடையானத்தம், சென்னி நத்தம்உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் பெருந்திரளாககலந்து கொண்டனர். விழா ஏற்பாட்டினை கிராம முக்கியஸ்தர்கள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment