கலெக்டர் அலுவலக முன்பு சிபி எம் சார்பில் கண்டனஆர்ப்பாட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 14 March 2023

கலெக்டர் அலுவலக முன்பு சிபி எம் சார்பில் கண்டனஆர்ப்பாட்டம்

கடலூர்  பேருந்து நிலையத்தை எம் புதூர் -க்கு மாற்றும் மாநகராட்சி தீர்மானத்தை ரத்து செய்ய கோரியும் தற்போது உள்ள பேருந்து நிலையத்தை விரிவுபடுத்த கோரியும் கொண்டங்கி ஏரியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டி திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் என பெயர் மாற்றம் செய்ய வலியுறுத்தி கடலூர் மாநகர அனைத்து அரசியல் கட்சிகள் குடியிருப்போர் அமைப்பு பொதுநல அமைப்புகளின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு  கண்டனஆர்ப்பாட்டம் சிபி எம் மாவட்ட செயலாளர் கோ. மாதவன் தலைமையில் நடைபெற்றது


கோரிக்கைகளை விளக்கி கண்டனம் முழக்க மிட்டார்கள். இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட தலைவர் திலகர் மாவட்ட நிர்வாகி ரமேஷ்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழு உறுப்பினர் சுப்பராயன் ராஜேஷ் கண்ணன் மாநகர செயலாளர் அமர்நாத் தட்சிணாமூர்த்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் திருமார்பன், சக்திவேல், கமல், ஜான்சன் மக்கள் நீதி மையம் மாவட்ட செயலாளர் மூர்த்தி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெ. ராமலிங்கம் முன்னாள் நகர செயலாளர் சேகர்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  நகர செயலாளர் நாகராஜ், பாக்யராஜ் தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் ரஹிம் இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர் நஸ்ருதீன் நாசர் திராவிட கழக தலைவர் மாதவன்



 குடியிருப்போர் சங்க  உதவி பொதுச் செயலாளர் தேவநாதன் ,ரங்கநாதன், ரமனி ,சண்முகம், கண்ணபிரான், தமயந்தி ,புவனேஸ்வரி மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் பாலு ,ரவி கடலூர் மாநகர பொது நல இயக்களின் கூட்டமைப்பு செயலாளர் ரவி  தனியார் போக்குவரத்து தொழிலாளர் சங்க தலைவர் குரு ராமலிங்கம் மீனவர் பேரவை தலைவர் சுப்பராயன் திருவள்ளுவர் பேரவை அருள்ஜோதி பஸ் நிலைய நடைபாதை சங்க தலைவர் சுகுமார்சி. பி எம் மாநகர குழு உறுப்பினர்கள் திருமுருகன், கருணாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகி பக்கிராம் நன்றி கூறினார்

No comments:

Post a Comment

*/