கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி மீது பொய் வழக்கு பதிவு செய்த திமுக அரசை கண்டித்து கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த நெய்வேலி இந்திராநகர் ஆர்ச் கேட் எதிரில் மாநில அம்மா பேரவை செயலாளரும், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினருமான எம்.பி.எஸ். சிவசுப்ரமணியன் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டமானது கழக அமைப்பு செயலாளரும், அதிமுக தெற்கு மாவட்ட செயலாளருமான சொரத்தூர் இராஜேந்திரன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசின் காவல்துறையை கண்டித்தும், கழக இடைக்கால பொது செயலாளர் மீது பொய் வழக்குகளை பதிவு செய்து, தொடர்ந்து காழ்ப்புணர்ச்சியை கடைபிடித்து வரும் திமுக அரசை கண்டித்தும், அதிமுகவினர் கண்டன கோஷங்களை எழுப்பினார்.
மேலும் ஆர்பாட்டத்தில கடலூர் அதிமுக தெற்கு மாவட்ட பொருப்பாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என நூற்று கணக்கானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment