மஹாராஷ்டிரா வங்கி புதிய கிளை தொடக்க விழா நிகழ்ச்சி ஒன்றுகடலூர் மாவட்டம் நெய்வேலி வடக்குத்து பகுதியில் நடைபெற்றது. அப்போது புதிய வாடிக்கையாளர் களுக்கு சலுகைகளையும் மஹாராஷ்டிரா வங்கி கிளை அறிவித்தது .
கடலூர் மாவட்டத்தில் மஹாராஷ்டிரா வங்கி ஒரே கிளையுடன் கடலூர் மாநகரில் மட்டுமே இயங்கி வந்தது. இந்நிலையில் அதன் 2-வது கிளை நெய்வேலிவடக்குத்து ஊராட்சி பகுதியில் மஹாராஷ்டிரா வங்கி சென்னை மண்டல அலுவலகம் சார்பில் துணை மண்டல மேலாளர் ஸ்ரீகாந்த் ராவ் தலைமையில் புதுச்சேரி முதன்மை மேலாளர் ஸ்ரீதரன் முன்னிலையில் தொடங்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர்களாக வடக்குத்து ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சடையப்பன் ராணி அண்ட் ராணி நிறுவன உரிமையாளர் லாரன்ஸ், பொறியாளர்கள் தாமோதரன், பரணிதரன், செந்தில், தொழில் அதிபர்கள் முருகேசன் கலையரசன் உள்ளிட்டோர் பங்கேற்று புதிய கிளையை தொடங்கி வைத்தனர் .
வங்கி கிளை தொடக்க நாளன்று 50 வாடிக்கையாளர்கள் அவரவர் கணக்குகளை துவக்கினர். மேலும் தங்க நகை,கார்,கல்வி தொடர்பான கடன் வழங்கும் திட்டமும் தொடங்கி வைக்கப்படுவதாக நெய்வேலி வடக்குத்து மகாராஷ்டிரா வங்கி கிளை மேலாளர் யு நாகார்ஜுனா தெரிவித்தார் .
மேலும் தங்க நகை கடனுக்கு 8 சதவீதமும், வீடு கட்ட- வாங்க 8. 40 சதவீதமும், கார் கடன் வாங்க 8.9 சதவீதமும், தனி நபர் கடனுக்கு 9.80 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7.50 சதவீதமும் சலுகைகளாக அறிவிக்கப்பட்டன மேலும் புதிய கணக்கு தொடங்குதல் குறித்து ஆதார் அடையாள அட்டை, நிரந்தர கணக்கு எண், 4 புகைப்படங்கள் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவை ஆதாரங்களாக எடுத்துக் கொள்ளப்படும் என்று வங்கி கிளை மேலாளர்யு நாகர்ஜுனா நன்றி தெரிவித்த போது குறிப்பிட்டார்
இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் வங்கி அலுவலர்கள் ராஜா மற்றும் ஹரி ஆகியோர் செய்திருந்தனர்
No comments:
Post a Comment