விற்பனை செய்த மணிலா பயிர்களுக்கு உடனடியாக பணம் தர சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்குமா??? விவசாயிகள் எதிர்பார்ப்பு
குறிஞ்சிப்பாடி வட்டத்தில் உள்ள விவசாயிகள் மணிலா பயிரிட்டு அறுவடை செய்து வருகின்றனர் இந்த மணிலா பயிர்களை குறிஞ்சிபாடியில் உள்ள அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் மணிலாவை விற்பனை செய்து வருகின்றனர் இதற்காக தரவேண்டிய தொகைகளை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்துவது வழக்கம். ஆனால் கடந்த ஒரு வார காலமாக ஆகியும் பல விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் பணம் செலுத்தாமல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பணி புரியும் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். காலம் தாழ்த்தி வருவதால் மணிலா பயிரிடுவதற்கு உரங்கள் மருந்துகள் உள்ளிட்டவைகளை கடன் மூலம் பெற்று உற்பத்தி செய்து அறுவடையான மணிலா பயிர்களை அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.இதற்கான பணம் அதிகாரிகள் வாரகணக்கில் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தாமல் காலதாமதம் ஏற்படுத்திய வருவதால் கடன் கொடுத்த கடைக்காரர்களுக்கும் விவசாயிகளுக்கும் வாய் சண்டை ஏற்பட்டு வருவதால் இதனால் மிகவும் மன உளைச்சல் ஏற்படுத்துகிறது.ஆகையால் சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை விற்பனை கூட மாவட்ட உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு செலுத்த வேண்டிய தொகையை உடனுக்குடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்
No comments:
Post a Comment