காணாமல் போன சிறுவன் குளத்தில் இறந்த நிலையில் மீட்பு. முதலை இழுத்துச் சென்றதா? விசாரணை தீவிரம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 29 March 2023

காணாமல் போன சிறுவன் குளத்தில் இறந்த நிலையில் மீட்பு. முதலை இழுத்துச் சென்றதா? விசாரணை தீவிரம்.

 


கோதண்டவிளாகத்தில் காணாமல் போன சிறுவன் குளத்தில் இறந்த நிலையில் மீட்பு. முதலை இழுத்துச் சென்றதா? விசாரணை தீவிரம்.



கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே கோதண்டவிளாகம் கிராமத்தில் ரமேஷ்-இந்துமதி இவர்களின் இரண்டாவது  மகனான மூன்று வயது ஸ்ரீதர் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தான்.


அப்போது 28-03-2023 ந்தேதி மாலை நான்கு மணி முதல் காணவில்லை.


அதனால் பல இடங்களில் தேடிப் பார்த்த கிராம மக்கள் குளத்துப் பகுதியிலும், தேடினர். அப்போது சிறுவன் குளத்தில் தவறி விழுந்திருக்கலாம் என்று சந்தேகம் அடைந்த நிலையில் தீயணைப்புத் துறையினர் உதவியுடன்  தேடினர். மேலும் குளத்தில் முதலைகள்  இருந்து வருவதால் குளத்தோரம் சென்ற சிறுவனைமுதலை  இழுத்துச் சென்றுள்ளதா என்ற அச்சமும் கிராமத்தினருக்கு இருந்தது.


பல மணி நேரங்களுக்கும் மேலாக தேடிப் பார்த்தும் சிறுவன் கிடைக்காததால் சிறுவனின் பெற்றோர் கிராம மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் வருகை தந்தார். தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் என பலரும் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். இரவு நேரம் என்பதால் குளத்தில் இறங்கி தேடுவதற்கான போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால் தீயணைப்புத் துறையினர் கரையிலே நின்று தேடினர். 


எப்படித் தேடியும் சிறுவன் கிடைக்காததால் கிராமமே சோகத்திலும் அச்சத்திலும் ஆழ்ந்தது. ஒரு வழியாகஏழு மணி நேர தேடுதலுக்குப் பிறகு சிறுவன் குளத்தில் இருந்து பிணமாக மீட்கப்பட்டான். மீட்கப்பட்டசிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்குஅனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிறுவன் இறப்பைக் கண்டு கோதண்ட விலாசம்கிராமம் சோகத்தில் இருந்து வருகிறது.

No comments:

Post a Comment

*/