நெய்வேலியில் ஒன்றிய மோடி அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 27 March 2023

நெய்வேலியில் ஒன்றிய மோடி அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நெய்வேலியில் ஒன்றிய மோடி அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

 


கடலூர் மாவட்டம் நெய்வேலி மெயின்பஜார் காந்தி சிலை அருகில் முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி அவர்களின் M.P பதவியிலிருந்து நீக்கம் செய்யபட்டதை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்தில் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.ஆர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமை வகித்தார் நெய்வேலி நகர காங்கிரஸ் தலைவர் ஸ்டீபன் வரவேற்புரை வழங்கினார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விருதாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் MRR ராதாகிருஷ்ணன் அவர்கள் பேசுகையில் கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதற்கு குஜராத் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அவர் மீது அநீதிக்கு புறம்பாக தீர்ப்பு வழங்கிய மோடி அரசை கண்டிக்கிறோம் என தெரிவித்தார். 


பின்னர் பாஜக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி A.S இளஞ்செழியன் முன்னாள் மாவட்ட தலைவர் பெரியசாமி INTCU ரவிக்குமார் முன்னாள் மாவட்ட தலைவர் மைக்கேல் ரவி அலுவலக செயலாளர் குமார் பணித்தலைவர் இளங்கோவன் பொதுச் செயலாளர் மாகி ராமச்சந்திரன் பண்ருட்டி வட்டத் தலைவர் கலிய பெருமாள் பழனிவேல் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் அன்பரசு ,ராஜா மாவட்ட செயலாளர் இருதயசாமி எஸ்சி எஸ்டி பிரிவு மாவட்டத் தலைவர் ராமலிங்கம் மாவட்ட மகிலா காங்கிரஸ் ஹேமலதா நகரத் தலைவர் முருகன், சக்திவேல் ,ராஜன் நகர பொருளாளர் முருகன் இளைஞர் காங்கிரஸ் தலைவர் அரவிந்த் நெய்வேலி இந்திரா நகர் தலைவர் அற்புதராஜ் ராஜேந்திரன் குகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/