சேத்தியாத்தோப்பில் அதிமுகவின் நிர்வாகிகளும் தொண்டர்களும் உயர் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
கடலூர் மாவட்டம் சேத்தியாத் தோப்பில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி.கே. பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்தும் பொதுக்குழு தொடர்பான உயர் நீதிமன்ற இன்றைய தீர்ப்பை வரவேற்றும் அதிமுகவின் சேத்தியாத்தோப்பு நகர கழகச் செயலாளர் எஸ்.ஆர். மணிகண்டன் தலைமையில் அதிமுக கழகக் கொடியுடன் சேத்தியாத்தோப்பு நகர அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் ஒன்று கூடி அண்ணன் எடப்பாடியார் வாழ்க! வருங்கால முதல்வர் எடப்பாடியார் வாழ்க! என்று கோஷமிட்டவாறு சேத்தியாத்தோப்பு கடைவீதியில் ஊர்வலமாக வந்து ராஜீவ் காந்தி சிலை அருகே தங்கள் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்தும் விதமாக வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் சேத்தியாதோப்பு முன்னாள் நகரகழக செயலாளர் எஸ் கே நன்மாறன், நகர இணைச்செயலாளர் லலிதா, நகர அவைத் தலைவர் கோழி.கோவிந்தசாமி, மாவட்ட பிரதிநிதிகள் தெய்வ.ராஜகுரு, பாலசுந்தரம்,நகர கழகப்பொருளாளர் ராமலிங்கம், ஜெய்சங்கர், கடலூர் மேற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் வீரமூர்த்தி,சேத்தியாத்தோப்பு பேரூராட்சி வார்டு செயலாளர் கே பி ஜி.கார்த்திகேயன், ஸ்ரீதர்,டைலர் குணசேகரன், மாரியப்பன் ரவி,அண்ணா.பிரபாகரன், ராமமூர்த்தி, கமலக்கண்ணன், கோபால், அரங்கப்பன், நடராஜன், கனகரத்தினம், ஆதனூர் பாலு, நேரு, திலீபன், ராஜகவி, ஹக்கீம் மற்றும் பல அதிமுக தொண்டர்களும் கலந்து கொண்டு இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.
No comments:
Post a Comment