கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே மழவராயநல்லூர் கிராமத்தில் இருந்த துணை சுகாதார நிலையம் நல்ல முறையில் இயங்கி வந்தது.இதன் மூலம் மழவராயநல்லூர், முடிகண்டநல்லூர், குமாரக்குடி, கோதண்டவிளாகம், நங்குடி, விழுப்பெருந்துறை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் மிகவும்பயன் பெற்று வந்தனர். மருத்துவ முதலுதவி மற்றும் சிகிச்சை, மருத்துவ ஆலோசனை மருந்துகள் என அனைத்தும் கிராம மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. சிறப்பான சிகிச்சை அளித்து வந்த இந்த துணை சுகாதார நிலையம் அதிகாரிகளின் போதிய பராமரிப்பு இல்லாததால் தற்போது இந்த கட்டிடத்தை சுற்றி முட்புதர்கள் மண்டியும், கட்டிடம் பாழடைந்தும் இடிந்து விழும் நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் மருத்துவ வசதி பெற முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். சிறப்பான முறையில் இயங்கி வந்த துணை சுகாதார நிலையம் பயன்பாட்டில்இல்லாததால் இங்கு மருத்துவ வசதி பெற்று வந்த கிராம மக்கள் பல கிலோமீட்டர் செல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு தான்
கடந்த அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்டு இக்கிராமத்தில் சிறப்பாக இயங்கி வந்த அம்மா மினி கிளினிக்கும் தற்போது முடக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் மேலே குறிப்பிட்ட கிராம மக்கள் தங்கள் உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனையை தீர்த்துக் கொள்ளபல கிலோமீட்டர் அலைந்து செல்ல வேண்டிய நிலைதான்உள்ளது.
மீண்டும் துணை சுகாதார நிலையத்தை பயன்பாட்டுக்குக்கொண்டு வர பழைய கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் அமைக்க வேண்டும் என பலமுறை மாவட்ட நிர்வாகம் மருத்துவ அதிகாரிகள் என மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறும்இக்கிராம மக்கள் இதனை உடனடியாக பயன்பாட்டுக்குக் கொண்டு வர அதிகாரிகள் மனது வைக்க வேண்டும் என மீண்டும் கோரிக்கை வைக்கிறார்கள்.
No comments:
Post a Comment