சிதம்பரத்தில் இலவச பொது மருத்துவ முகாம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 6 March 2023

சிதம்பரத்தில் இலவச பொது மருத்துவ முகாம்.

சிதம்பரத்தில் இலவச பொது மருத்துவ முகாம்.


பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஒளஷதி கேந்திரா மற்றும் சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் இணைந்து சிதம்பரம் மாலை கட்டி தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது முகாமிற்கு சாசன தலைவர் முகமது யாசின் தலைமை தாங்கினார் சங்க பொருளாளர் கேசவன்,  கோவிந்தராஜன், கவுன்சிலர் அப்பு சந்திரசேகரன்,  உறுப்பினர்கள் விஜயபாலன், பழனியப்பன், சிவசங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்க உறுப்பினர் விஸ்வநாதன் அனைவரையும் வரவேற்று பேசினார். முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணை ஆளுநர் தீபக்குமார் கலந்துகொண்டு பொது மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இந்த மருத்துவ முகாமில் டாக்டர்கள்  பிரவீன்குமார்,  கிருஷ்ணராஜ், அங்கீதாசிங், பிரேமா, முருகன், திவாகர் உள்பட டாக்டர் குழுவினர்கள் கலந்து கொண்டு சுமார் 80 நபருக்கு சிகிச்சை அளித்து இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது முகாமில் சங்க உறுப்பினர்கள் அனிதா தீபக்குமார், அருள், செல்வி, பன்னாலிஜெயின், பொறியாளர் புகழேந்தி, ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment