காட்டுமன்னார்கோயில் அருகே திடீர் தீ விபத்து 15 ஏக்கரில் பயிரிடப்பட்ட கரும்பு தீ எரிந்து நாசம் விவசாயி கண்ணீர் மல்க பேட்டி - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 6 March 2023

காட்டுமன்னார்கோயில் அருகே திடீர் தீ விபத்து 15 ஏக்கரில் பயிரிடப்பட்ட கரும்பு தீ எரிந்து நாசம் விவசாயி கண்ணீர் மல்க பேட்டி

காட்டுமன்னார்கோயில் அருகே ஆண்டிபாளையம் கிராமத்தில் திடீர் தீ விபத்து 15 ஏக்கரில் பயிரிடப்பட்ட கரும்பு தீ எரிந்து நாசம் விவசாயி கண்ணீர் மல்க பேட்டி



தீயில் எரிந்த கரும்புகளை எடுக்க அதிகாரிகள்  பாரபட்சம் பார்ப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு



கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள மாமங்கலம் ஊராட்சி ஆண்டிபாளையம் கிராமத்தில் கருப்பையா என்பவர் 15 ஏக்கரில் கரும்பு கரும்பு பயிரிடப்பட்டு வருகின்றனர் இந்த நிலையில் மர்ம நபர்கள் சிலர் கரும்பு பயிர்களில் தீ வைத்ததால் கரும்புகள் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது . 


அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என விவசாயிகள் கண்ணீர் மல்க பேட்டி

இவரைப் போலவே அருகில் உள்ள விவசாயிகள் பலரும் கரும்பு பயிரிட்டு தற்போது அறுவடை செய்து வருகின்றனர். இந்நிலையில் கருப்பையாவின் கரும்புஇன்னும் சில தினங்களில் அறுவடை செய்யவுள்ள நிலையில் அவரது கரும்பு வயலை அப்பகுதியை சேர்ந்தசிலர் முன்விரோதம் காரணமாக தீ வைத்ததாக கருப்பையா தெரிவித்து வருகிறார்.


தீ வைக்கப்பட்ட 10 ஏக்கர் கரும்பு வயல் முற்றிலும் எரிந்து சேதமானது. மேலும் விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக வைத்திருந்த நீர்மூழ்கி மோட்டார் மற்றும் போர்வெல்லும் சேர்ந்து தீயில் சேதம் ஆனது. இதனால் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளது. கரும்பு வயல் தீ விபத்தில் எரிந்து சேதமான நிலையில் இதுகுறித்து கரும்பு வயலைஅதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து சென்றுள்ளனர்.மேலும் இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டதால் புகாரின் அடிப்படையில் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்துள்ளார். கரும்பு வெட்டி சர்க்கரை ஆலைக்கு அனுப்பும்போது தீயில் எரிந்த கரும்புவிற்கு அதிகாரிகள் சிறப்பு ஒதுக்கீட்டின் அடிப்படையில் அனுமதி அளித்து கரும்புவை எடுத்துக் கொண்டு முழு விலை தர வேண்டும் எனவும் கருப்பையா தெரிவித்துள்ளார்.


செய்தியாளர் கே பாலமுருகன்

காட்டுமன்னார்கோயில்

No comments:

Post a Comment

*/