புவனகிரி ஒன்றிய ஆனைவாரி ஊராட்சியில் என்எல்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அதிமுக ஊராட்சி மன்றத் தலைவரிடம்மனு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 23 March 2023

புவனகிரி ஒன்றிய ஆனைவாரி ஊராட்சியில் என்எல்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அதிமுக ஊராட்சி மன்றத் தலைவரிடம்மனு


புவனகிரி ஒன்றிய ஆனைவாரி ஊராட்சியில் என்எல்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அதிமுக ஊராட்சி மன்றத் தலைவரிடம்மனுகடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே ஆனைவாரி ஊராட்சியில் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி அண்ணாதுரை தலைமையில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புவனகிரி ஒன்றியத்தில் உள்ள பகுதியில் என்எல்சி சுரங்க இரண்டாவது விரிவாக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மற்றும் புதிய சுரங்கங்கள் துவக்குவதற்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றக்கோரி கோரிக்கை மனுவினை கிராம பொதுமக்கள் இளைஞர்கள் சேர்ந்து ஊராட்சி மன்றத் தலைவரிடம் வழங்கினர். இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் மனுக்களை பெற்று கிராம சபை தீர்மானங்களோடு இணைத்து அனுப்பப்படும் என்று தெரிவித்தார். மேலும் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கையாக மாவட்டத்தில் உள்ள என்எல்சி யால் பாதிக்கப்படும் கிராமங்கள் மற்றும் புதிய சுரங்கங்கள் எடுக்கப்பட உள்ள கிராமங்களில் என்எல்சிக்கு மற்றும் நிலக்கரி எடுப்பதற்கான எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது, அதனை தீர்மான நோட்டில் எழுதக்கூடாது என்று வாய்மொழி உத்தரவு போடப்பட்டுள்ளதால் இன்று அனைத்து இடங்களிலும் நடைபெறும்


கிராம சபை கூட்டங்களிலும் என்எல்சிக்கு எதிரான மற்றும் நிலக்கரி புதிய சுரங்கங்கள் தோன்றுவதற்கு எதிரான கோரிக்கை மனுக்கள் மட்டுமே பெற்றுக் கொள்ளப்பட்டன. இதனால் கிராம மக்கள்  தங்களது உரிமையைக் கூறக் கூட எங்களுக்கு உரிமை இல்லையா என்று தங்கள் வேதனையைத் தெரிவிக்கின்றனர். இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் குணசுந்தரி சுப்பிரமணியம், ஊராட்சி செயலர் சுதா செந்தில் மற்றும் ஆணைவாரி கிராம பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment