உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் சாத்துக்கூடல் கீழ்பாதி ஊராட்சியில் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழ்பாதி ஊராட்சியில், ஊராட்சி மன்ற துணை தலைவர் வெங்கடேசன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மாவட்ட உதவி திட்ட அலுவலர் மங்கையர்கரசி, வட்டார வளர்ச்சி அலுவலர் தண்டபாணி, உள்ளிட்ட அரசு அதிகாரிகளும், ஊராட்சி செயலர் வெங்கராயர்துரை மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தங்கள் கிராமத்திற்கு தேவையான குடிதண்ணீர், சாலைவசதி, மயான கொட்டகை, கூடுதல் தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்தும் பேசப்பட்டது. மேலும் கீழ்பாதி ஊராட்சிக்கு தற்காலிகமாக ஒரு தூய்மை பணியாளரும் நியமனம் செய்யப்பட்டது. பின்னர் பொதுமக்கள் முன்னிலையில் கிராம வரவு செலவு கணக்குகள் சரிபார்க்கப்பட்டது.
No comments:
Post a Comment