கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் பாளையங்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் பாளையங்கோட்டை வடக்கு பாளையம் கொண்ட சமுத்திரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து சுமார் 150 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளியில் குடிநீர் வசதி, கழிவறை இல்லாமல் மிகவும் அவதடைந்து வந்தனர். இது சம்பந்தமாக பலமுறை அதிகாரியிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது
மேலும் இன்று காலை அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை என்று பள்ளி மாணவ மாணவிகள் 50 பேர் திடீரென பள்ளியின் முன்பு வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு
திடீரென ஸ்ரீமுஷ்ணம் டு காட்டுமன்னார்கோயில் செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்
தகவல் அறிந்த சோழபுரம் போலீஸ் மற்றும் ஸ்ரீமுஷ்ணம் காவல் ஆய்வாளர் வீரமணி தலைமையில் கீழ்பாதி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர் மாணவிகளிடையே பேச்சுவார்த்தை செய்தனர்
அப்பொழுது மாணவர்கள் கூறியதாவது
இந்தப் பள்ளி முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டு காமராஜர் அவர்களே வந்து திறந்து வைத்தார்கள் இந்த பள்ளி ஆனது தற்பொழுது மாவட்டத்தின் கடை கோடியில் உள்ளதால் அதிகாரிகள் யாரும் கண்டு கொள்வதில்லை மேலும் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் உள்ளது, இருக்கின்ற கழிவறையும் விஷ ஜந்துக்கள் நடமாட்டம மற்றும் முட்புதர்கள் சூழ்ந்து இருப்பதால் கடும் அவதி அடைந்து வருகிறோம்.
இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டுள்ளனர் ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இதனால் பள்ளி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
மேலும் இந்த அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்திலேயே பள்ளி மாணவர்களுக்கான விடுதியும் இருப்பதால் விடுதியிலும் போதுமான குடிநீர் வசதி, இல்லை என்று மாணவர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மேலும் பேச்சுவார்த்தையின் போது அனைத்து கோரிக்கையையும் இன்றைய நிறைவேற்றப்படும் என தெரிவித்ததின் அடிப்படையில் மாணவர்கள் தங்கள் வகுப்புகளுக்கு திரும்பினர்.
No comments:
Post a Comment