விருத்தாசலம் ஸ்ரீவிருத்தாம்பாள், பாலாம்பாள் உடனுறை ஸ்ரீவிருத்தகிரீஸ்வர் ஆலய மாசிமக திருவிழாவை முன்னிட்டு இன்று தெப்பதிருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
விருத்தகிரிஸ்வரர் ஆலய மாசி மக விழா கடந்த மாதம் 25 அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. சுவாமிகளுக்கு தினமும் அபிஷேகம் அலங்காரம் செய்து வீதியுலா நடைபெற்று வந்தது. கடந்த மார்ச் 2 அன்று கோவிலுக்கு திருப்பணி செய்த விபசித்து முனிவருக்கு காட்சி தரும் 6 ஆம் திருவிழா நடைபெற்றது.
இதனை தொடர்ந்து, 8ம் நாள் திருவிழாவாக தேரோட்டம், 10ம் திருவிழாவாக மாசிமக திருவிழா நடைபெற்றது.
11 ம் திருவிழாவான இன்று முருகப்பெருமான் எழுந்தருளிய, தெப்ப உற்சவம் நடைபெற்றது. விழா உற்சவதாரர்களான, விருத்தாசலம் நகராட்சி சார்பில் விழா ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. புதுப்பேட்டையில் அமைந்துள்ள அம்மன் குளத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் முருகப்பெருமான் எழுந்தருளினார்.
தெப்பகுளத்தை சுற்றி நான்கு புறமும் நின்ற பக்தர்களுக்கு மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர், முருகப்பெருமான் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தெப்ப திருவிழாவில் விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனுக்கு அரோகரா என்ற முழக்கங்களுடன் இறைவனை வழிபட்டு முருகபெருமானின் பேரருளை பெற்றனர்.இந்நகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ் ,நகராட்சி ஆணையாளர் சேகர் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை நகராட்சி நிர்வாகம் செய்திருந்தது.
No comments:
Post a Comment