சேத்தியாத்தோப்பில் சாலைப் பணி தொடங்கபூமி பூஜை - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 3 March 2023

சேத்தியாத்தோப்பில் சாலைப் பணி தொடங்கபூமி பூஜை

சேத்தியாத்தோப்பில் எம் எல் ஏ தொகுதி மேம்பாடுதிட்ட நிதியில் அமைக்கப்படும் சாலையின் பூமி பூஜையில் எம் எல் ஏ அருண்மொழி தேவன் பங்கேற்பு. 



கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள காமராஜர் வாய்க்கால் கரை சாலையானது சேத்தியாத்தோப்பு ராஜீவ் காந்தி சிலை அருகில் சென்னை கும்பகோணம் முக்கிய சாலையில்  இருந்து பிரிந்து கிழக்கு நோக்கி சென்னிநத்தம், கிளாங்காடுப்பகுதியை இணைக்கும் சாலையாக உள்ளது. அரசு உதவி பெறும் பள்ளி,தனியார் பள்ளிகள், அரசினர் மருத்துவமனை இப்படியான முக்கிய பயன்பாட்டிற்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள்,பயணிகள் இந்தசாலையைக் கடந்தே பயணி க்கிறார்கள்.


இந்த சாலை அமைக்கப்பட்டு ஆண்டுகள் பலஆகிசேதமடைந்துவிட்டதால்இதனை சரி செய்து கொடுக்கும் படி சேத்தியாத்தோப்பு பேரூராட்சியின் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் இந்த சாலையை பயன்படுத்தும் பயணிகள் வைத்த கோரிக்கையை ஏற்று புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட2022-2023 நிதியிலிருந்து   ரூபாய் 16,50,000/-ஐ இந்த சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு ஒதுக்கிக் கொடுத்துள்ளார்.


பூமி பூஜை செய்யும் நிகழ்ச்சி  இன்று(03/03/2023) காலை 10:30 மணி அளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புவனகிரி எம்எல்ஏ அருண்மொழி தேவன், கடலூர் மேற்கு மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் உமா மகேஸ்வரன், கடலூர் மேற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் வீரமூர்த்தி, சேத்தியாத்தோப்பு முன்னாள் நகரச் செயலாளர் எஸ் கே.நன்மாறன், நகரவை தலைவர் கோழி கோவிந்தசாமி, புவனகிரி மேற்கு ஊராட்சி ஒன்றிய நிர்வாகி ஜெயசீலன், சேத்தியாத்தோப்பு அதிமுக நகர கழக செயலாளர் எஸ் ஆர்.மணிகண்டன், நகரப் பொருளாளர் ராமலிங்கம், மாவட்ட பிரதிநிதி தெய்வ.ராஜகுரு, ஜெய்சங்கர், சேத்தியாதோப்பு பேரூராட்சி வார்டு செயலாளர் கே பி ஜி கார்த்திகேயன், புவனகிரி மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் பிரித்திவி,வளையமாதேவி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் செல்வராஜ், அண்ணா பிரபாகரன், ராமமூர்த்தி,ஸ்ரீதர், அஞ்சாபுலி, லலிதா, மாரியப்பன் ரவி, பாலு, சௌந்தர்ராஜன்,கமலக்கண்ணன், மகேந்திரன், விஸ்வநாதன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொள்ள சேத்தியாத்தோப்பு நகர துணைச் செயலாளர் சம்பத் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

*/