புவனகிரி ரெயின்போ நர்சரி பள்ளியில் மழலையர்களின் நவநாகரிக ஆடை அலங்காரஅழகுப் போட்டி - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 5 March 2023

புவனகிரி ரெயின்போ நர்சரி பள்ளியில் மழலையர்களின் நவநாகரிக ஆடை அலங்காரஅழகுப் போட்டி

புவனகிரி ரெயின்போ நர்சரி பள்ளியில் மழலையர்களின் நவநாகரிக ஆடை அலங்காரஅழகுப் போட்டி  நடைபெற்றது.


கடலூர் மாவட்டம் கீழ்புவனகிரியில்உள்ளது ரெயின்போ நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி.இந்ததனியார் பள்ளியில் மழலையர் மாணவர்,மாணவிகளுக்கான நவநாகரிக ஆடைஅழகு மற்றும் கலைத்திறன் போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இந்த போட்டிகளில் மாணவர்களின் அறிவுத்திறன் சார்ந்து நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 



அதில் மாணவர்கள் அபாகஸ் திறமை, இசை நடனப் போட்டி, யோகாசனம், கராத்தேசண்டைப் பயிற்சி, சிறு நாடகம், மனப்பாட பயிற்சி உள்ளிட்ட பல்வேறு விதமான மாணவர்களின் திறன் வளர்ப்பு முன்னேற்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற மழலையர்கள் மாணவர்கள் பெரியவர்களே தோற்றுவிடும் அளவிற்கு தங்களது திறனை வெளிப்படுத்தி கைத்தட்டல்களை அள்ளிச் சென்றனர். 


மேலும் மழலையர் மாணவர்களின் அளப்பரிய திறன்கள் அவர்கள் நடத்திக் காட்டிய நிகழ்ச்சிகளை மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் வருகை தந்து தங்களது உற்சாக ஆரவாரத்தை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியின் நிறைவில் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு அவர்களை உற்சாகப்படுத்தி ஊக்குவிக்கும் வகையில் பரிசும் பாராட்டுப் பத்திரமும் ரெயின்போ பள்ளி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் நிர்வாகி ரவிச்சந்திரன் தலைமை ஏறறார். போட்டியில் வென்ற மழலைகளுக்கு திருமதி உஷாராணி பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு தலைமை ஆசிரியை சாந்தி, ஆண்டு அறிக்கை மேகராஜ் நிஷா, நவநாகரிக உடை கண்காட்சி அமைப்பு கோமதிப்ரியா, பண்பாட்டு கலை நிகழ்ச்சி சாந்தினி பேகம், யோகா பயிற்றுநர் வாலரினா லித்யா, அபாகஸ் பயிற்றுனர் திவ்யா, கராத்தே போட்டிக்கான பயிற்றுநர் இளவரசன்ஆகியோர்தம் பணிகளை சிறப்புற செய்திருந்தனர்.சுமங்கல தேவி நன்றியுரை கூற நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

No comments:

Post a Comment

*/