சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பேராசிரியர்கள் மருத்துவம் அல்லாத ஊழியர்கள் என 1800க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர் இவர்களுக்கு கடந்த ஜனவரி,பிப்ரவரி மாத ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது
மருத்துவமனை வாயிலில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவர்கள் அல்லாத ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர் ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் மனோகர் பழனிவேல் ரவி மருத்துவர் பாலாஜி சாமிநாதன் குழந்தை நல மருத்துவர் ராமநாதன் மருத்துவர் மணவாளன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினர் ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு உடனடியாக ஊதியம் வழங்க வலியுறுத்தி தோஷங்களை எழுப்பினர் தமிழக அரசு இன்னும் கால தாமதம் ஏற்படுத்தினால் போராட்ட தீவிரம் என தெரிவித்துள்ளனர்
No comments:
Post a Comment