கீரப்பாளையத்தில் மகளிர் குழுவினருக்கு மகளிர் தின வாழ்த்து கூறிய மாவட்ட கலெக்டர். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 17 March 2023

கீரப்பாளையத்தில் மகளிர் குழுவினருக்கு மகளிர் தின வாழ்த்து கூறிய மாவட்ட கலெக்டர்.

கீரப்பாளையத்தில் மகளிர் குழுவினருக்கு மகளிர் தின வாழ்த்து கூறிய மாவட்ட கலெக்டர்.கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஊராட்சியில் பல்வேறு திட்ட பணிகளை பார்வையிட வந்த கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் கூடுதல் கலெக்டர் மதுபாலன் ஆகியோர் கீரப்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் திட்ட ஆய்வு கூட்டம் நடத்தினர். 


இந்நிலையில் ஊராட்சி அளவிலான மகளிர் குழு கூட்டமைப்பு கீரப்பாளையம் இணைச் செயலாளர் அழகம்மாள் தலைமையில் குழுவினர்  நேரில் சென்று மகளிர் தின விழாவிற்கு மாவட்ட கலெக்டரை சிறப்பு விருந்தினராக அழைத்ததின் பேரில் நேற்று கீரப்பாளையத்தில் பல்வேறு திட்ட பணிகளை பார்வையிட வந்த கலெக்டர் மற்றும் கூடுதல் கலெக்டர் ஊராட்சி அளவிலான மகளிர் குழு கூட்டமைப்பினரை அலுவலகத்தில்  சந்தித்து மகளிர் தின வாழ்த்து கூறி கலந்துரையாடினர். 

 

கலெக்டரின் இந்த திடீர்  வருகையால் மகளிர் குழுவினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பெருந்தலைவர் கனிமொழி தேவதாஸ்படையாண்டவர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன் சீனிவாசன் கீரப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கீரன் மகளிர் குழு கூட்டமைப்பு  உதவி திட்ட அலுவலர் கனகவள்ளி வட்டார இயக்க மேலாளர் கீதா  கீரப்பாளையம் கூட்டமைப்பு தலைவர் சரிதா செயலாளர் செம்மலர் பொருளாளர் கௌதமசெல்வி இணைச் செயலாளர் அழகம்மாள்  உள்பட மகளிர் குழு கூட்டமைப்பினர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment