வீராணம் ஏரியில் மிதந்த ஆண் சடலம். இறந்தது எப்படி? போலீசார் விசாரணை. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 17 March 2023

வீராணம் ஏரியில் மிதந்த ஆண் சடலம். இறந்தது எப்படி? போலீசார் விசாரணை.

  

சேத்தியாத்தோப்பு அருகே வீராணம் ஏரியில் மிதந்த ஆண் சடலம். இறந்தது எப்படி?   போலீசார் விசாரணை. 


கடலூர் மாவட்டம்  காட்டுமன்னார்கோவில் காந்தியார் வீதி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் ( 45) இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர்  கலிய மலை கிராமத்திற்கு அருகே வீராணம் ஏரியில் இறந்து கிடப்பதாக புத்தூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 


சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்த  சக்திவேல் உடலை மீட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் சக்திவேல்  வீராணம் ஏரியில் வேடிக்கை பார்க்கும் போது கால் தவறி விழுந்தாரா?  அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற பல்வேறு கோணத்தில்  போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். எப்போதும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில், மீனவர்கள் அதிகம் ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையிலும் வீராணம் ஏரியில் ஆண் சடலம் ஒன்று மிதந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

No comments:

Post a Comment

*/