சிதம்பரம் அருகே கால் முறிவு ஏற்பட்டு காயமடைந்த முதியவருக்கு சிகிச்சைக்கு உதவிய செய்தியாளர்களுக்கு குவியம் பாராட்டுகள் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 18 March 2023

சிதம்பரம் அருகே கால் முறிவு ஏற்பட்டு காயமடைந்த முதியவருக்கு சிகிச்சைக்கு உதவிய செய்தியாளர்களுக்கு குவியம் பாராட்டுகள்


சிதம்பரம் அருகே கால் முறிவு ஏற்பட்டு காயமடைந்த முதியவருக்கு சிகிச்சைக்கு உதவிய செய்தியாளர்களுக்கு குவியம் பாராட்டுகள்


கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வல்லம்படுகை கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ். வயது.55 என்பவர் சில மாதங்களுக்கு முன்பு ரயில்வே தண்டவாளத்தில் ஏற்பட்ட விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு, ஒரு கால் மிகவும் மோசமான நிலையில் கடும் அவதிப்பட்டு வந்தார் இதனை அப்பகுதி சேர்ந்த இளைஞர்கள் சமூக ஆர்வலர் மற்றும் உள்ளாட்சி அரசு நாளிதழிலின் காட்டுமன்னார்கோவில் செய்தியாளர் S.சத்தியமூர்த்தி என்பவரை தொடர்பு கொண்டு தெரிவித்ததின் அடிப்படையில் சிதம்பரம் பகுதி தந்தி தொலைக்காட்சி செய்தியாளர் கண்ணதாசன் அவர்களுடன் சேர்ந்து தன்னார்வலர் உதவியுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அழுகிய நிலையில் இருந்த காலை அகற்றி மறுவாழ்வு அளித்துள்ளனர். 


இதற்கு உறுதுணையாக இருந்த அவருக்கு உதவிய வல்லம்படுகை சேர்ந்த இளைஞர்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் செய்தியாளர்களுக்கு அவரது குடும்பத்தார் பாராட்டுகளை தெரிவித்தார் இச்செயல் அப்பகுதி பொதுமக்களிடையே பாராட்டுகளை பெற்றுள்ளது.

No comments:

Post a Comment

*/