சிதம்பரம் வீனஸ் குழுமப் பள்ளிகளில் தேசிய அறிவியல் தினவிழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 3 March 2023

சிதம்பரம் வீனஸ் குழுமப் பள்ளிகளில் தேசிய அறிவியல் தினவிழா

 

சிதம்பரம் வீனஸ் குழுமப் பள்ளிகளில் தேசிய அறிவியல் தினவிழா கொண்டாட்டங்கள்



சிதம்பரம், வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வீனஸ் கல்விக் குழுமப் பள்ளிகளின் தாளாளர் திரு.எஸ்.குமார் அவர்களின் தலைமையில், மெட்ரிக் பள்ளி முதல்வர் திருமதி.ஏ.ரூபியால் ராணி அவர்களின் முன்னிலையில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 



வீனஸ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் பிப்ரவரி 18 ஆம் தேதியும், வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிப்ரவரி 22ஆம் தேதியும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. அதில் சுமார் 600 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களின் தங்களின் படைப்புகளை காட்சிப்படுத்தினர். இக்கண்காட்சியில் மிகச்சிறப்பான முறையில் படைப்புகளை உருவாக்கிய 75 மாணவர்களுக்கு மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 



பங்குபெற்ற அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவின் சிறப்பு விருந்தினர்களாக அண்ணாமலைப் பல்கலைக் கழக பொறியியல் துறை பேராசிரியர் முனைவர் V.நேருகுமார் மற்றும் மருந்தியல் துறை பேராசிரியர் முனைவர் V.பார்த்தசாரதி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த கருத்துகளைப் பகிர்ந்து கொண்டு சான்றிதழ்களும் கேடயமும் வழங்கி கவுரவித்தனர். விழாவின் சிறப்பு விருந்தினர்களை பள்ளியின் தாளாளர் சால்வை அணிவித்தும் நினைவுப்பரிசு வழங்கியும் கவுரவப்படுத்தினார்.



 விழாவிற்கான ஏற்பாடுகளை மெட்ரிக் பள்ளி மெட்ரிக் பள்ளி துணை முதல்வர் அறிவழகன் மற்றும் நிர்வாக அலுவலர்கள் ரவிச்சந்திரன் மற்றும் ரூபி கிரேஸ் போனிகலா ஆகியோர் செய்திருந்தனர். மேலும், விழாவில் பரிசு பெற்ற மாணவ மாணவிகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். மெட்ரிக் பள்ளியின் ஆசிரியை விஜயலெட்சுமி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க நிர்வாக அலுவலர் ரூபி கிரேஸ் போனிகலா அவர்கள் நன்றியுரை கூற தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுபெற்றது.

No comments:

Post a Comment

*/