கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பாலக்கரையில் பசுமை தாயகம் சார்பில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு குடிதண்ணீர் மற்றும் மரக்கன்றுகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் சசிகுமார் தலைமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நகர செயலாளர் நாகராஜன், முன்னிலை வகித்தனர்,
இதற்கு சிறப்பு அழைப்பாளராக பாமக மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவர், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் கோவிந்தசாமி, மாநில மகளிரணி செயலாளர், மாவட்ட கவுன்சிலர் டாக்டர் தமிழரசி ஆதிமூலம், பாமக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், கடலூர் மேற்கு மாவட்ட வன்னியர் சங்க தலைவரும், 27வது வார்டு நகரமன்ற உறுப்பினருமான சிங்காரவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டு தண்ணீர் மற்றும் மரம் வளர்த்தலின் முக்கியதும் , குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியின் முடிவில் பசுமை தாயகம் நகர தலைவர் ஸ்ரீராமச்சந்திரன் நன்றியுரையாற்றினார்.
No comments:
Post a Comment