ஸ்ரீமுஷ்ணம் அருகே குமாரக்குடி ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம். மாவட்ட ஆட்சித் தலைவர் காட்டுமன்னார்கோயில் எம் எல் ஏ கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் குமாரக்குடி ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தனித் துணை ஆட்சியர் கற்பகம் வரவேற்புரை ஆற்றினார். சிதம்பரம் சார் ஆட்சியர் சுவேதா சுமன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் தலைமை ஏற்று அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப் பற்றி பொது மக்களிடையே சிறப்புரை ஆற்றினார்.
சிறப்பு அழைப்பாளராக காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பல்வேறு விதமான நலத்திட்டங்கள் மற்றும் பட்டா வழங்கி பொதுமக்களிடையே கருத்துரை வழங்கினார்
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் எம் எஸ் கந்தசாமி, ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி மாயகிருஷ்ணன், மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், வருவாய்த்துறை அதிகாரிகள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு
அரசின் பல்வேறு துறைகளில் இருந்து பொதுமக்கள் பார்வைக்காக பொருட்காட்சிகளும் வைக்கப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment