விருத்தாசலத்தில் ராகுல் காந்தியின் சிறை தண்டனை தீர்ப்பை ரத்து செய்ய கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 25 March 2023

விருத்தாசலத்தில் ராகுல் காந்தியின் சிறை தண்டனை தீர்ப்பை ரத்து செய்ய கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

விருத்தாசலத்தில் ராகுல் காந்தியின் சிறை தண்டனை தீர்ப்பை ரத்து செய்ய கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.



கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரையில் காங்கிரசின் தேசிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியை அவர்கள் மோடிக்கு எதிராக பேசியதாக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை என்ற தீர்ப்பை ரத்து செய்ய கோரியும், பேச்சுரிமை வேற்றுமை கருத்து உரிமையை பறிக்கும் மோடி அரசின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்தும் பாசிச வெறிதனத்தை கண்டித்தும், ஜனநாயக நாட்டில் மக்களை பாதுகாக்க எதிர்க்கட்சித் தலைவர்களின் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் கோகுல கிறிஸ்டீபன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


இதில் நகர செயலாளர் ராஜசேகர்,மாவட்ட குழு ஐயப்பன், ஒன்றிய செயலாளர் கம்மாபுரம் சுதாகர், நகர குழு பீர்முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



தேசிய காங்கிரஸ் கட்சி தங்கதுரை, சீனு, விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த  நகர செயலாளர் முருகன், பூக்கடை ரவி, ஒன்றிய செயலாளர்கள் திருஞானம், சுப்புஜோதி, மருதையன், மக்கள் நீதி மையம் மாவட்ட அமைப்பாளர் புஷ்பராஜ் ஒன்றிய அமைப்பாளர் குமார் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த மாவட்ட துணை தலைவர் சுப்பிரமணியன்,மாவட்ட குழு தண்டபாணி, மாவட்ட பொருளாளர் மும்மூர்த்தி, உட்பட பலர் கலந்துகொண்டு கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

No comments:

Post a Comment

*/