இந்த ஆர்ப்பாட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 6 லட்சம் பணி இடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், இளைஞர்களின் வேலை வாய்ப்பை கேள்விக்குறியாக்கும் அவுட் சோர்சிங் முறையை கைவிட வேண்டும், சாலை பணியாளர்கள் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும், உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடங்கிய மனித சங்கிலி பாலக்கரை வரை நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பாக்யராஜ், ரமேஷ் ,லெனின், பாஸ்கர், விஜயகுமார்,சிற்றரசன், குறிஞ்சி செல்வன், குமரன், சின்னசாமி, ராஜேந்திரன், உள்ளிட்ட ஜாக்டோ ஜியோ சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment