சேத்தியாத்தோப்புப் பகுதியில் கொளுத்தும் வெயிலின் சூட்டை சமாளிக்க பனைநுங்கு வியாபாரம் தீவிரம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 30 March 2023

சேத்தியாத்தோப்புப் பகுதியில் கொளுத்தும் வெயிலின் சூட்டை சமாளிக்க பனைநுங்கு வியாபாரம் தீவிரம்.



சேத்தியாத்தோப்புப் பகுதியில்  கொளுத்தும் வெயிலின் சூட்டை சமாளிக்க பனைநுங்கு வியாபாரம் தீவிரம்.




கடலூர் மாவட்டம்  சேத்தியாத்தோப்பு, புவனகிரி, திருமுட்டம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் கோடை வெயிலின் உக்கிரம் கொளுத்தி வருகிறது. அதிக வெப்பத்தால் பல இடங்களில் அனல் காற்றும் வீசி வருகிறது. நகரங்களில் மற்றும் கிராமப்புற பகுதிகளில் நடந்து செல்வதற்கே பொதுமக்கள் அஞ்சி வருகின்றனர். அந்த அளவுக்கு வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. 



மதியம் இரண்டு மணி மூன்று மணி வாக்கில் கடைத்தெருக்கள் வெயில் தாக்கத்தால் வெரிச்சோடி காணப்படுகிறது. இவ்வாறான நிலையில் கோடை வெயிலுக்கு இதமாக இளநீர், வெள்ளரிப்பிஞ்சு குளிர்பானங்கள், இயற்கை உணவுகள் என பலவற்றை எடுத்துக் கொள்ளும் பொது மக்கள் கோடை கொளுத்தும் வெயிலுக்கு குளிர்ச்சி தரும், உடலுக்கு சக்தி அளிக்கக்கூடிய உணவுப் பொருளான நுங்கு வாங்கி உண்பதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். 



இயற்கைப் பொருளான கலப்படம் இல்லாதபனை நுங்கு கோடை வெய்யில் எவ்வளவு வெப்பத்தை தருவதாக இருந்தாலும் அதனை தணிக்க கூடிய ஆற்றல் கொண்டது. அதனால்  வெயிலின்கடும் தாக்கத்தை ஓரளவுக்காவது தணிக்கும் பொருட்டு சேத்தியாத்தோப்பு பகுதியில் சாலையோரங்களில் நுங்கு விற்பனையாவதை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். பல்வேறு பகுதிகளில் இருக்கும் பனை மரங்களில் இருந்து கொண்டுவரப்படும் நுங்கு இங்கு வைத்து வியாபாரம் செய்யப்படுகிறது. பத்து ரூபாய்க்கு மூன்று நுங்குகள் என விற்பனை செய்யப்பட்டு வருவதால் ஆர்வமுடன் பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். இதனை விற்பவருக்கும் ஓரளவு வருமானம் கிடைக்கிறது.


மேலும் கடந்த காலங்களை விட தற்போது சுற்றுப்புற பகுதிகளில் பனை மரங்கள் எண்ணிக்கை குறைந்து விட்டதால் நுங்கு வரத்தும்  குறைந்து வருகிறது. வருங்கால வெயில் தாக்கத்தைக் குறைக்கும் பொருட்டு  பனை மரங்களை வெட்டுவதைத் தடுத்து அதனைப் பாதுகாக்க வேண்டும் எனவும், புதிய பனை விதைகளை நடுவதற்கு  அரசு ஊக்கப்படுத்தினால் உடலை வெப்பத்திலிருந்து ஓரளவுக்கு காக்க மக்களுக்கு இந்த பனை நுங்கு பயன்படும் என்பதே பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது..

No comments:

Post a Comment

*/