திருச்சியில் காவல்துறை மண்டலங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது 62 வது தமிழ்நாடு காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான தடகள போட்டியில் வடக்கு மண்டல காவல்துறை சார்பில் கடலூர் மாவட்டம் சிறப்பு உதவி ஆய்வாளர் K. சக்திவேல் அவர்கள் 100 மீட்டர், 200 மீட்டர் ஒட்டப்பந்தயங்களில் பங்கேற்று தங்கப் பதக்கமும், நீளம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்று வெண்கல பதக்கமும் வென்றார். கடலூர் ஆயுதப்படை தலைமை காவலர் R. சாம்பிரகாஷ் அவர்கள் 100 மீட்டர் ஒட்டப்பந்தயம், 200 மீட்டர் ஒட்டப்பந்தயங்களில் பங்கேற்று வெண்கல பதக்கம் வென்றார். ஆயுதப்படை காவலர் G. சின்ராஜ் அவர்கள் நீளம் தாண்டுதல் பங்கேற்று வெண்கல பதக்கம் பெற்ற காவல்துறையினரை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் அவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார் மேலும் சைலேந்திரபாபு பார்ட்டி சான்றிதழ் மெடல் வழங்கினார்
திருச்சியில் காவல்துறையினருக்கு மண்டலங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள்
No comments:
Post a Comment