அருள்மிகு பழமலைநாதர் திருக்கோயில் திருத்தல வரலாறு புத்தகம் வெளியீட்டு விழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 15 March 2023

அருள்மிகு பழமலைநாதர் திருக்கோயில் திருத்தல வரலாறு புத்தகம் வெளியீட்டு விழா


விருத்தாசலம் விருத்தகிரிஸ்வரர் திருக்கோயிலில் விடையாற்றி உற்சவத்தில் ஆறாம் நாள் திருவிழாவில் அருள்மிகு பழமலைநாதர்  திருக்கோயில் திருத்தல வரலாறு  புத்தகம் வெளியீட்டு விழா.கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மூர்த்தி தளம் தீர்த்தம் முக்தி என அருளாளால் போற்றப்பட்ட நடுநாட்டு திருத்தலம் என்று அழைக்கப்படும் விருத்தாசலம் பழமலைநாதர் திருக்கோயிலில்  மாசி மக திருவிழா நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து விடையாற்றி உற்சவம் ஆறாம் நாள் திருவிழாவில் அருள்மிகு பழமலைநாதர் திருக்கோயில் திருத்தல வரலாறு புத்தகம் நாதஸ்வரம் பட்டுப்பிள்ளை அய்யாசாமி அறக்கட்டளை சார்பில் விருத்தாசலம் நகர மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ் புத்தகத்தை வெளியிட விருத்தாசலம் காவல் துணை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் பெற்றுக்கொண்டார்.


இந்நிகழ்ச்சி ஏற்பாட்டை அறுபத்து மூவர் திருப்பணி அறக்கட்டளை நிறுவனர் சங்கர் செய்திருந்தார். மேலும் திருக்கோயில் நிர்வாக அலுவலர் மற்றும் அலுவலர்கள் சிவாச்சாரியார்கள் சிப்பந்திகள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment