கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த நத்தமேடு பகுதியைச் சேர்ந்தவர் தில்லைவாசன் இவரது மனைவி மாலதி வயது 44 ஏழு மாத கர்ப்பிணியான மாலதி கடந்த 9.3.2023 அன்று உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கிருஷ்ணாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உடல் பரிசோதனைக்கு சென்ற பொழுது அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசுகாமராஜ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஸ்கேன் செய்ய அறிவுறுத்தி சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்பு அவரை அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மாலதியின் வயிற்றில் இருந்த குழந்தை எந்த ஒரு அசைவும் இல்லாமல் இருப்பதை கண்டுபிடித்தனர்.
பின்னர் உடனடியாக 10.03.2023. அன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குழந்தை இறந்த நிலையில் வெளியே எடுக்கப்பட்டது பின்னர் கடந்த 14. 3. 2023 அன்று வீட்டிற்கு வந்த மாலதி மருத்துவர் கொடுத்த மருந்து மாத்திரைகளை சரிவர சாப்பிடாத காரணத்தினால் மீண்டும் ரத்தப் போக்கு ஏற்பட்டு 15.03.2023 அன்று சிகிச்சைக்காக விழுப்புரம் அடுத்துள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் இந்நிலையில் சிகிச்சைவந்தார்.
கடந்த. 17.03. 2023 அன்று உயிரிழந்தார் சம்பவம் குறித்து மாலதியின் தம்பி மணிமாறன் மருதூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் மருதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரசவத்தில் இப்போது குழந்தை இறந்து சில நாட்களிலேயே தாயும் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment