மாநகராட்சி கூட்டத்தில் கண்ணீருடன் கோரிக்கை வைத்த பெண் உறுப்பினர் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 18 March 2023

மாநகராட்சி கூட்டத்தில் கண்ணீருடன் கோரிக்கை வைத்த பெண் உறுப்பினர்

கடலூர் மாநகராட்சி மாமன்றக்கூட்டம் மாதாந்திரக்கூட்டம் மாநகராட்சி மேயர் திருமதி. சுந்தரி ராஜா தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன்,மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டம் துவங்கிய உடன் மேயர் சுந்தரி ராஜா தமிழக முதல்வர் தூக்கம் இல்லாமல் மன உளைச்சலில் இருப்பதாகவும்  அவருக்கு மன கஷ்டம் தராதவாறு கூட்டத்தை சிறப்புடன் நடத்தி முடிக்க கேட்டுக் கொள்வதாக கூறினார். 


இதற்கடுத்து 41வது வார்டு பகுதி  உறுப்பினர் தமிழரசன் மாமன்றத்தில் உள்ள இரு உறுப்பினர்களுக்கு இன்று பிறந்தநாள் மாமன்றம் சார்பில் வாழ்த்துகள் கூறினார். இதற்கு மன்றத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் நேற்று பிறந்தநாள் கொண்டாடிய மாமன்ற உறுப்பினர்கள் அருள் பாபு மற்றும் நடராஜன் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தனர். 


உடனே   தி.மு.க.வை சேர்ந்த தமிரசன்,கீதா குணசேகரன், பிரகாஷ்,சுமதி,மகேஸ்வரி , சரத்,ராதிகா பிரேம்குமார் ,பாரூக்அலி,கீர்த்தனா ஆறுமுகம்,கர்ணன் உள்ளிட்ட 10  மாமன்ற உறுப்பினர்கள் கூட்ட அரங்கில் இருந்து வெளியேறினர்.



இவர்களிடம் செய்தியாளர்கள் கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது வெளியே செல்கிறீர்கள் வெளிநடப்பு செய்கிறீர்களா என்று கேட்டதற்கு இல்லை என்றனர் மக்கள் பிரச்சனைக்காக தான் கூட்டம் நடக்கிறது என்று கேட்டதற்கு இங்கு எந்த ஒரு பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை என்றும் சில கவுன்சிலர்கள் முனமுனத்தனர் .

மேலும் அவர்கள் கூறுகையில் வெளியில் பூமி பூஜை பணி இருப்பதாக கூறி கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே வெளியில் சென்றனர். தொடர்ந்து, 42வது வார்டு உறுப்பினர் விஜயலட்சுமி செந்தில் பேசுகையில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து எனது வார்டில் எந்தவொரு பணியும் நடக்கவில்லை என்றும்  எனது வார்டும் கடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்ப்பட்ட பகுதிதான் என்று பேசினார் , 


22 வது வார்டு உறுப்பினர் சுபாஷினி பேசுகையில் மக்கள் பிரச்சனைக்காக மாநகராட்சி ஆணையாளருக்கு போன் செய்தால் போன் எடுப்பதில்லை என்று குற்றம் சாட்டினார் இதற்கு ஆணையாளர் அப்படியெல்லாம் இல்லை நான் மீட்டிங் கில் இருந்தேன் என்று கூறிய பதிலை ஏற்க மறுத்த உறுப்பினர் ஆணையரிடம் இது குறித்த நீண்ட விவாதத்தில் ஈடுப்பட்டார்,


4 வது வார்டு உறுப்பினர் சரிதா பேசுகையில் வரும் ஏப்ரல் 14 ந் தேதி டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் தலைமை தபால் நிலையம் முன் தற்போது உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலையை சீரமைக்க கோரினார் கடலூரில் குத்தகை சீட்டு குறித்த சந்தேகத்தை ஆணையாளரிடம் கேட்டதற்கு ஆணையாளர் இது குறித்து விசாரிப்பதாக கூறியது வியப்பாக இருந்தது.

7 வது வார்டு உறுப்பினர் த.சங்கீதா பேசுகையில் மாநகராட்சி பகுதியில் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளால் விபத்துக்கள் நடைபெறுவதாகவும் சமீபத்தில் தனது உறவுக்காரர் ஒருவர்  வாகனத்தில் செல்லும்போது சாலையில் திரிந்த மாடுகளால் ஏற்ப்பட்ட விபத்தில் உயிர் இழந்த தாகவும் இது போன்ற நிகழ்வு யாருக்கும் கூடாதென்றும் மாநகராட்சி நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டுமென்றும் கூறும் போது தன்னையும் அறியாமல் கண்ணீர் மல்க அழுதார். 

 

14 வது வார்டு உறுப்பினர் கண்ணன் பேசுகையில் எனது வார்டில் நடக்கும் சாலை போடுவது வாய்க்கால் கட்டுவது,பூங்கா அமைப்பது மற்றும் எந்தவொரு வேலைப்பற்றியும் எனக்கு தகவல் தெரிவிப்பதில்லை என்றும்  இதுகுறித்த கேள்விகளையும்  பல பகுதிகளில் பாதாள சாக்கடைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர்கள் நேரடியாக வாய்க்காலில் கலப்பதால் அப்பகுதிகளில் துர் நாற்றம் வீசுவாதாக கூறினார்  மாமன்ற உறுப்பினர்களின் அனைவரின் கோரிக்கையாக  தூயகுடிநீர்,பாதாள சாக்கடை, சாலை வசதிகள்,மின்விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை கோரிக்கைகளை எழுப்பினர்.கவுன்சிலர் நடராஜன் பேசும் போது திமுக தலைவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெறும் நிலையில் அவர் அவர் முழு கடையடைப்பு 100 சதவீதம் வெற்றி என தெரிவித்துள்ளார்.


என்ற போது குறுக்கிட்ட பா.ம.க. உறுப்பினர் சரவணன், எங்கள்  தலைவரை ஒருமையில் பேசி உள்ளதால் அதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறி மேயர் சுந்தரி ராஜா முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார்.

39 வது வார்டு உறுப்பினர் பாலசுந்தரம் தனது வார்டுக்குட்பட்ட சோனாங்குப்பம் பகுதிக்கு பாலம்டஅமைத்து கட்டிதர ஏற்பாடு செய்ய கூறினார் எனது வார்டு பகுதியில்  குடிநீர் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும் அதை மாமன்றத்தில் கொண்டு வந்து காண்பித்து, சுத்தமான சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டுமென்று வலியுறுத்தினார். 


துணை மேயர் தாமரைச்செல்வன் பேசுகையில் 4 வது வார் டு உறுப்பினர் வைத்த கோரிக்கையான டாக்டர் அம்பேத்கர் சிலையை புணரமைக்க வேண்டுமென்றும் அதுவும் வெண்கல சிலையாக மாற்ற வேண்டுமென்றும் கூறினார் தனது வார்டு பகுதிகளில் சில பணிகள் செய்யப்படாமல் இருப்பது குறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்கும்போது குறிகிட்ட ஆணையாளர் அதிகாரிகளிடம் யாரும் கேள்விகள் கேட்க வேண்டாமென்றும் ஆணையாளராகிய நான் பதில்கூறுகிறேன் நீங்கள் அமருங்கள் என்றதும் துணை மேயர் பெருந்தன்மையோடு ஏற்றுக்கு கொண்டு மாநகரத்தில் எங்கு மக்களுக்கான பணிகள் நடைப்பெற்றாலும் அதில் எனக்கு பெருமை  என்று பேசினார்.


பின்னர் பேசிய மேயர் திருமதி சுந்தரி ராஜா மேயர் என்கிற முறையில் அனைத்து வார்டு கவுன்சிலர்களையும் சமமாக கருதி அனைத்து பணிகளும் மேற்கொண்டு வருகிறேன். கடலூர் மாநகராட்சியை சிறந்த மாநகராட்சியாக கொண்டு வர நீங்கள் அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் உறுப்பினர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றி தரப்படும் என்று பேசினார்.முன்னதாக கடலூர் மாநகராட்சி கூட்டம் தொடங்குவதற்கு முன்பு 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டிருந்ததன் காரணமாக கடலூர் மாநகராட்சி வளாகம் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது

No comments:

Post a Comment

*/