காட்டுமன்னார்கோவில் எம்ஜிஆர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் இடமாற்றம். மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் டாக்டர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் பல்வேறு துறைகளில் சுமார் 800 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இக்கல்லூரியின் முதல்வர் தென்னரசு காரணமேயில்லாமல் சில தினங்களுக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் இதனை எதிர்த்து சுமார் 400 க்கும் மேற்பட்டோர் அவரை மீண்டும் இக்கலூரியிலேயே பணியமர்த்த வேண்டும் என உயர்கல்வித்துறைக்கு கோரிக்கைவைத்து கல்லூரி வளாகத்திலேயே இரண்டாவது நாளாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து எவ்விதமான பேச்சுவார்த்தையிலும் எந்த அதிகாரிகளும் ஈடுபடவில்லை.இது கண்டு வேதனை அடைந்துள்ள மாணவர்கள் தங்களது போராட்டம் மூன்றாவது நாளாகவும் தொடரும் எனத்தெரிவித்து தமிழக அரசு மற்றும் உயர்கல்வித்துறைக்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.
No comments:
Post a Comment