சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தண்ணீரில் நீந்தி மக்களை பீதியடைய வைக்கும் முதலைகள் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 12 March 2023

சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தண்ணீரில் நீந்தி மக்களை பீதியடைய வைக்கும் முதலைகள்

சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தண்ணீரில் நீந்தி மக்களை பீதியடைய வைக்கும் முதலைகள். உடனடியாக பிடிக்க வேண்டி வனத்துறைக்கு கோரிக்கை. 


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு, வெள்ளாற்றில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டபழமை வாய்ந்த அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டின் மேற்குப் பகுதியில் தற்போது தண்ணீர் இருந்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக தண்ணீரில் மூன்று முதலைகள் வேறுவேறு இடங்களில் சுற்றித் திரிந்து வருகின்றன. 


இதனைக் காணும் விவசாயிகளும், கிராம மக்களும் அச்சமடைந்துள்ளனர். மேலும் ஆற்றில்  பலரும் குளிக்க  துணிதுவைக்க, கால்நடைகளை குளிப்பாட்ட இப்படிபல்வேறு வகைகளில் இந்த ஆற்றுத் தண்ணியை உபயோகித்துவருகின்றனர். அதனால் ஆற்றுத் தண்ணீரில் இருக்கும் முதலைகளால் எப்போது வேண்டுமானாலும் உயிராபத்து ஏற்படும் சூழல் இருக்கிறது. 


இந்த முதலைகள் ஆற்றின் உள்ள மணல் திட்டுகளில் ஒய்யாரமாக படுத்து ஓய்வெடுத்து வருவதை அணைக்கட்டின் வழியாக செல்லும் பலரும் அச்சத்துடன் பார்த்து வருகின்றனர். ஆற்றில் முதலை இருப்பதை அறிந்த மீனவர்களும் மீன்பிடிப்பதற்கு தயங்கி வருகின்றனர். ஆற்றில் உள்ள மூன்று முதலைகளை விரைந்து பிடித்து வேறு பகுதியில் கொண்டு விட்டு இப்பகுதியில் ஏற்பட்டு வரும் அச்சத்தைப் போக்க வேண்டும் எனஇங்குள்ள விவசாயிகள், கிராமமக்கள் குடியிருப்பு வாசிகள் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

*/