திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஜெகேஜெ காலனியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் திட்டக்குடியில் இருந்து விருத்தாசலம் செல்லும் பேருந்தில் சென்று கொண்டிருந்த போது கார்மங்குடி கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக கருவேப்பிலங்குறிச்சியில் இறங்கியுள்ளார், அப்போது அவர் கையில் அணிந்திருந்த ஒரு பவுன் மதிப்பிலான தங்க கைச்செயினை தனியார் பேருந்தில் தவறவிட்டுள்ளார், இந்த நிலையில் பேருந்தை கூட்டி கழுவி சுத்தம் செய்யும் போது விளாங்காட்டூரை சேர்ந்த தேமுதிக முன்னாள் நிர்வாகி லூகாஸ் என்பவர் கையில் ஒரு பவுன் தங்க கைச்செயின் கிடைத்துள்ளது, அதனை 2வது வார்டு நகரமன்ற உறுப்பினரும், நகர தேமுதிக செயலாளருமான ராஜ்குமாரிடம் தெரிவித்துள்ளார்,
உடன் விருத்தாசலம் காவல்துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று ஒரு பவுன் தங்க செயினை காவல்துணை கண்காணிப்பாளர் ஆரோக்யராஜிடம் ஒப்படைத்தனர். இந்த செயலை பாராட்டி லூக்காஸ் என்பவருக்கு காவல்துணை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் சால்வை அணிவித்து கௌரவித்தார்.
No comments:
Post a Comment