புவனகிரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 47 ஊராட்சிகளைச் சேர்ந்த பணியாளர்கள் தங்கள் சம்பளப்பாக்கி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் முறையிட்டனர்.
கடலூர் மாவட்டம் புவனகிரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 47 ஊராட்சிகளில் பணியாற்றி வரும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஆப்ரேட்டர்கள், துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் புவனகிரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரியை சந்தித்து தங்கள் கோரிக்கைகளையும் குறைபாடுகளையும் கூறினர்.
கடந்த பல மாதங்களாக நிலுவையில் இருக்கும் சம்பள பாக்கியை உடனடியாக தர வலியுறுத்தியும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஒவ்வொரு மாதமும் ஐந்தாம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும் .மேலும் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு போதுமான பணி பாதுகாப்பு உபகரண பொருட்கள் வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள ஏழாவது ஊதிய நிலுவைத் தொகையை அனைத்து ஊராட்சிகளிலும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் வலியுறுத்திக் கூறினர்.
No comments:
Post a Comment