குறிஞ்சிப்பாடியில் ஸ்டுடியோ உரிமையாளர் வெட்டிக் கொலை !! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 28 February 2023

குறிஞ்சிப்பாடியில் ஸ்டுடியோ உரிமையாளர் வெட்டிக் கொலை !!

குறிஞ்சிப்பாடியில் ஸ்டுடியோ உரிமையாளர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சாவடி பகுதியில் ஸ்டுடியோ கடை நடத்தி வருபவர் சுந்தர் என்கிற சுந்தரமூர்த்தி இவர் குறிஞ்சிப்பாடி சுப்பராயன் நகர் பகுதியில் வசித்து வருகிறார் நேற்று இரவு அவரது வீட்டிற்கு செல்லும் வழியில் வழிமறித்த சிலர் அவரை அறிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி உள்ளனர். 


இந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சுந்தரை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் குறிஞ்சிப்பாடி காவல்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் குறிஞ்சிப்பாடி காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த சுந்தரை குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் பாண்டிச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர் இதை அடுத்து அவரது உடல் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.


மேலும் இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் சுந்தரை வெட்டிய மர்ம நபர்கள் யார் எதற்காக கொலை செய்தார்கள் என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் நள்ளிரவில் ஸ்டுடியோ உரிமையாளர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறிஞ்சிப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

*/