சீமானை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி எம்.என் ராதா கடிதம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 1 February 2023

சீமானை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி எம்.என் ராதா கடிதம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி.  உள்துறை செயலாளருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி எம்.என் ராதா கடிதம்

மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைப்பது குறித்து சட்டம் ஒழுங்கு பாதிக்கின்ற வகையில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கூறி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி எம்.என் ராதா தமிழக உள்துறை செயலாளர் பணீந்தர ரெட்டிக்கு மனு ஒன்று அனுப்பியுள்ளார்.

ஜெமினி எம்.என் ராதா

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-


நாடகம் ,இலக்கியம், கலை ,மூலமாக தமிழ் வளர்த்து ஐந்து முறை தமிழகத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்று தேசத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் தமது வாழ்நாள் முழுவதும் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் நினைவாக கடற்கரையில் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக  ஜனவரி 31-ஆம் தேதி சென்னையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள்  பேனா நினைவு சின்னத்தை கடலில் வைப்பதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் மீனவர்கள் பொதுமக்கள் வரவேற்றனர் . இக் கூட்டத்தில் கொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மெரினா கடற்பகுதிக்குள் பேனா நினைவு சின்னம் அமைப்பதை எதிர்ப்பதாக தெரிவித்தார். மேலும், பேனா நினைவு சின்னத்தை மெரினா கடலில் வைத்தால், நானே ஒருநாள் அதனை உடைப்பேன் என்று ஆணவத்தோடு அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் வன்முறையை தூண்டும்  விதத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசி உள்ளார் எனவே சீமானை குண்டர் சட்டத்தில் உடனடியாக கைது செய்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்.இ வ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment