புவனகிரியில் நெடுஞ்சாலைத் துறையினர் நீண்ட கால ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர் !!
கடலூர் மாவட்டம் புவனகிரியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர் பல ஆண்டுகளாக சாலையின் விரிவாக்கத்திற்கு ஆக்கிரம்புகளை அகற்றப்படாமல் இருந்த நிலையில் தொடர்ந்து சாலை விபத்துக்கள் அதிக அளவில் உயிர் சேதங்கள் ஏற்படுத்தியதற்கு காரணமான ஆக்கிரமிப்புகளை இன்று புவனகிரியில் குறிஞ்சிப்பாடி
நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் பரமேஸ்வரி தலைமையில் புவனகிரி வட்டாட்சியர் ரம்யா உதவி பொறியாளர்கள் ஜெகன் வினோத் முன்னிலையில் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கியது இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி மற்றும் உதவி ஆய்வாளர் சந்தோஷ் மற்றும் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
புவனகிரி பங்களாவிலிருந்து கீழ் புவனகிரி வரை சாலையின் இரண்டு பக்கங்களிலும் இருந்த ஆக்கிரமிப்புகளை பாராபட்சம் இன்றி அகற்றினர் நீண்ட நாட்களாக சாலைகளை ஆக்கிரமித்து கடைகளும் நடைபாதை கடைகளும் கோயில்களும் இருந்து வந்தன இவை அனைத்தையும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றினர் இதனால் இன்று புவனகிரி பகுதியில் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு காணப்பட்டது.
செய்தியாளர் வீ.சக்திவேல்
No comments:
Post a Comment