குறிஞ்சிப்பாடி பகுதியில் புதிய அரசு பள்ளி கட்டிட கூடுதல் வகுப்பறை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குறிஞ்சிப்பாடி பேரூராட்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூபாய் 31 லட்சத்தி 42 ஆயிரம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட புதிய பள்ளி கட்டிட கட்டுவதற்கு இன்று வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
மேலும் கடலூர் மாவட்டத்தில் குழந்தை நெய்ய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 144 பள்ளிகளில் 148 கட்டிடங்களில் 296 வகுப்பறைகள் ரூபாய் 46 கோடி மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் காணொளி வாயிலாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநில மேலாண் மற்றும் உழவு நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மாவட்ட ஆட்சியர் கி பாலசுப்பிரமணியம் கூடுதல் ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனார் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment