கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் இணைந்து ஸ்ரீமுஷ்ணம் கடைவீதியில் முன்னாள் வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.
ஸ்ரீமுஷ்ணம் நகரச் செயலாளர் வழக்குரைஞர் இளையராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலாளர் செல்வ மகேஷ் கலந்துகொண்டு காடுவெட்டி குருவின் திருஉருவப்படத்திற்கு மரியாதை செலுத்தியதோடு பொதுமக்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில இளம் பெண்கள் சங்கச் செயலாளர் செம்பாயி,மாவட்ட மாணவரணித் தலைவர் விஷ்ணு, முன்னாள் நகரச் செயலாளர் சேகர்,நகரத் தலைவர் மணிவேல்,நகர அமைப்புச் செயலாளர் ராமு,நகர ஊடகப் பேரவைச் செயலாளர் நகரப்பாடி கு.அப்பு, மணிகண்டன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment