நெய்வேலியில் பேங்கர்ஸ் எம்பிளாயி பெடரேஷன் இந்தியா சார்பில் இந்தியன் வங்கி தற்காலிக ஊழியர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
கடலூர் மாவட்ட இந்தியன் வங்கி தற்கலிக ஊழியர் ஆலோசனைக் கூட்டம் நெய்வேலி பேருந்து நிலையம் அருகே உள்ள CITU திடலில் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு BEFI தமிழ்நாடு இணை செயலாளரும் கடலூர் மாவட்ட BEFI ஸ்ரீதர் அவர்கள் தலைமை வகித்தார் BFFI கடலூர் மாவட்ட தலைவர் அரிய செல்வம் முன்னிலை வகித்தார்.
கூட்டதிற்க்கு CITU நகர்புற அலுவலக துணை தலைவர் ரமேஷ் வாழ்த்துரை வழங்கினார் மேலும் வெளிச்சம் தொலைக்காட்சி நிருபர் குமார் அவர்களள் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் இந்நிகழ்வில் சுமார் 50 தற்காலிக இந்தியன் வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் அவர்கள் போனஸ் பெற்று தந்த BEFI சங்கத்திற்கு நன்றி தெரிவித்தனர் . இக்கூட்டத்தில் தற்காலிக ஊழியாகள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் , தற்காலிக ஊழியாகள் அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை உறுதிசெய்ய வேண்டும் மேலும் வாடிக்ககையாளர் சேவை குறைகள் இன்றி சென்றடைய வேண்டும் என்ற தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது
No comments:
Post a Comment