கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகரத்தில் விருத்தாசலம் உளுந்தூர்பேட்டை சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்க பணி தற்போது நடைபெற்றுக் கொண்டு வருகிறது, இந்த நிலையில் ஜங்ஷன் சாலையான பாலக்கரை அருகில் தரைப்பாலம் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டு வருகிறது இதனால் போக்குவரத்து நெரிசல் காரணமாக விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் வரக்கூடிய அனைத்து பேருந்துகளும் ஒரு வழி மாற்று பாதையாக மாற்றப்பட்டு கடந்த சில நாட்களாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் விருத்தாசலத்தில் இருந்து ஸ்ரீமுஷ்ணம் வரை செல்லக்கூடிய தனியார் பேருந்து ஒன்று பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வரும் வழியில் ஒரு வழிமாற்றுப்பாதை சாலையில் செல்லாமல் போக்குவரத்து காவல்துறையினர் வைத்திருந்த பேரிக்கார்டை அகற்றிவிட்டு பேருந்து தடைசெய்யப்பட்ட சாலையில் செல்ல முற்பட்டது. அப்பொழுது எதிரி வரும் வாகனத்தால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அப்பகுதியில் பணியாற்றி கொண்டிருந்த போக்குவரத்து காவலர் தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை கண்டித்து,மீண்டும் பேருந்தை பின்னோக்கி இயக்க வைத்து மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தினார், இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சலசலப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment