சேத்தியாத்தோப்பு அருகே பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்று விடிய விடிய மகா சிவராத்திரி சுவாமி தரிசனம் செய்தனர்
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே ஓடாக்கநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள தில்லைவனத்தில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் ஆலயம் அமைந்துள்ளது.இந்த ஆலயத்தில் மகா சிவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக மூலவர் காசி விஸ்வநாதர்க்கு மூன்று கால பூஜையில் பல்வேறு அபிஷேகங்கள், அலங்காரங்கள் நடைபெற்று வந்தன. அதனுடன் கோவில் வளாகத்தில் ஆயிரக்கணக்கான சிவ பக்தர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்க பம்பை, உடுக்கை பாட்டு, சிலம்பாட்டம், பரதநாட்டியம் உள்ளிட்ட மண்ணின் பெருமை பேசும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு 7 மணி, 10 மணி, நள்ளிரவு 2 மணி, அதிகாலை 5 மணி என நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. யாகசாலை பூஜையில் 108 நவதானியங்கள், மூலிகைகள் உள்ளிட்டவை யாகசாலை வேள்வியிலிட்டு மகா சிவராத்திரி விழாவில் இறைவனின் தரிசனம் பெற்றனர்.
No comments:
Post a Comment