விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நமக்கு நாமே திட்டத்தில் நடந்து வரும் ரூபாய் ஒரு கோடியே 2 லட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்டும் பணி மற்றும் ரூபாய் 17 லட்சத்தில் சுற்றுச்சுவருடன் கூடிய ஆர்ச் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் பாலசுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இவ்ஆய்வின் போது விருத்தாச்சலம் நகர் மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ், நகராட்சி ஆணையாளர் சேகர், நகராட்சி பொறியாளர் சிவசங்கரன், தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment