கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ரியல் எஸ்டேட் சட்டத்தின் படி ப்ரொமோட்டர் அல்லாத ஏழை எளிய மக்கள் மனைகளாக பதிவதில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும். அதிகரித்து வரும் மக்கள் தேவைக்கேற்ற புதிய பணியிடங்கள் மற்றும் காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும். தமிழக அரசின் இரு மொழி கொள்கை எதிரான மூன்றாவது மொழி திறனை ரத்து செய்ய வேண்டும். அரசாணை 80ன் படி பணியிடை நீக்கத்தில் உள்ள அனைத்து பணியாளர்களும் உடனடியாக பணியில் அமர்த்திட வேண்டும்.
பதிவு துறையில் ஏற்கனவே தனியார் மூலம் செயல்படுத்திக் கொண்டிருக்கும் ஒப்பந்த வெளி முகாமை ரத்து செய்ய வேண்டும். என்.எல்.சி ,இ.எல்.சி.ஓ.டி ஆகியவற்றின் மூலம் கணினி மயமாக்க வேண்டும். பொது கலந்தாய்வின் மூலமாக பணியிட மாற்றங்களை நிரப்ப வேண்டும்.உரிய முறையாக காலத்தில் பணிவு மூப்பு பட்டியல் வெளியிட்டு பதவி உயர்வு வழங்கிட வேண்டும். பதிவு சட்டம் பிரிவு 86 இன் கீழ் வழங்கப்பட்டுள்ள பணி பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, அகவிலைப்படி நிலுவைத் தொகை உடனடியாக வழங்க வேண்டும்.புதிய ஓய்வு திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி சார் பதிவாளர் கோவிந்தராஜன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் சார் பதிவாளர்கள் லட்சுமி காந்தன், தாமோதரன், சங்கர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்புரையாக தமிழ்நாடு அரசு ஊழியர் நல சங்க மாவட்ட செயலாளர் நாட்டுதுரை மாநில செயற்குழு உறுப்பினர் விஜயகுமார் வழங்கினார்கள். அமைச்சுப் பணியாளர்களின் சங்கம் உதவியாளர் தர்மராஜ் நன்றி வழங்கினார்.
No comments:
Post a Comment