வேப்பூர் அருகே பைக் மீது டிராக்டர் மோதி விபத்து ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 20 February 2023

வேப்பூர் அருகே பைக் மீது டிராக்டர் மோதி விபத்து ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி.

காட்டுமைலூர் சிவன் கோவில் அருகே  பைக் மீது டிராக்டர் மோதி விபத்து ஒருவர் சம்பவ இடத்திலேயே  இறந்தார்.


கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகா  ஆசனூர் கிராமத்தை சேர்ந்த தேவராஜ் மகன் பெரியசாமி (வயது 35) இவர் பிப்ரவரி 19 ந் தேதி  கடலூர் மாவட்டம்,  வேப்பூர்  தாலுகா  கீழக்குறிச்சி கிராமத்திலுள்ள தனது அக்கா வீட்டு காதணி விழாவிற்கு சென்றுவிட்டு  மாலை 6.15 மணியளவில்  டிஎண்,20பிஏ,2815 என்ற எண்ணுள்ள  இருசக்கர வாகனத்தில்  ஆசனூர் செல்வதற்காக  கீழக்குறிச்சியிலிருந்து வேப்பூர் நோக்கி  சென்று கொண்டிருந்தார்


காட்டுமையலூர் சிவன் கோவில் அருகில் சென்ற போது எதிரே வந்து கொண்டிருந்த   டிஎண் 25 பி எக்ஸ், 6509 என்ற எண்ணுள்ள  டிராக்டர் டிப்பர் பெரியசாமி ஓட்டி சென்ற  இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.


இதில் பெரியசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டது

 

இந்த விபத்து  குறித்து வேப்பூர் போலிசார்  வழக்கு பதிவு செய்து மேலும்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

*/